On Babri Masjid judgment

வரலாற்றை செல்லாக்காசாக்கிய தீர்ப்பு தற்போதைய அரசியலுக்காக கடந்த காலத்தை மாற்றி அமைத்துவிட முடியாது : டாக்டர் ரொமிலா தாப்பர்

நீதிமன்றத்தால் வழங்கப் பட்டுள்ள தீர்ப்பு அரசியல் ரீதி யானதாகும். பல ஆண்டுக ளுக்கு முன்பே அரசு எடுத்த முடிவைத்தான் இது பிரதிபலிக் கிறது. நிலம் யாருக்கு சொந்தமா னது மற்றும் தகர்க்கப்பட்ட மசூ தியின் இடத்தில் புதிய கோவி லைக் கட்டுவது ஆகிய இரண் டின் மீதுதான் இந்தத் தீர்ப்பு கவனம் செலுத்தி யுள்ளது. மத அடையாளங்களை தற்கால அரசியலோடு பொருத்திப் பார்க்கும் சிக்கல் உருவாகியுள் ளது. ஆனால் இது வரலாற்று ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும் சித்தரிக்கப் படுகிறது. இது இந்த வழக்கில் இணைக்கப்பட்டாலும், தீர்ப்பின் போது தள்ளிவைக்கப்பட்டுவிட்டது.

கடவுள்கள் பிறந்ததாகக் கரு தப்படும் குறிப்பிட்ட இடத்தில் அந்தக் கடவுளின் நினைவாகக் கோவில் எழுப்ப வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்துள் ளது. இந்துக்களின் நம்பிக்கை அடிப்படையில் எழுந்த கோரிக் கையை ஏற்றே இதைத் தெரி வித்துள்ளது. எந்தவித ஆதார மும் அந்தக் கோரிக்கைக்கு இல்லாத நிலையில், சட்டத்தை நிலை நாட்டும் நீதிமன்றத் திடமிருந்து இத்தகைய தீர்ப்பை யாரும் எதிர்பார்க்கமாட்டார் கள். ராமரைக் கடவுளாக இந் துக்கள் வழி படுகிறார்கள். ஆனால், அவர் பிறந்த இடம், நிலத்திற்கான உரிமை மற்றும் இந்த இடத்தை கையகப்படுத் திக் கொள்ள பெரிய வரலாற்றுச் சின்னத்தைத் தகர்ப்பது ஆகிய வற்றிற்கு இந்த நம்பிக்கை உதவ முடியுமா?

மசூதியைக் கட்டுவதற்காக 12 ஆம் நூற்றாண்டில் அங்கி ருந்த கோவில் தகர்க்கப்பட்ட தாக தீர்ப்பு கூறுகிறது. இதனால் புதிய கோவில் கட்டுவதை நியாயப்படுத்தியுள்ளார்கள்.

தேசியத் தொல்பொருள் ஆய்வுக்கழகத்தின் அகழ்வா ராய்ச்சிகள் மற்றும் அதன் அறிக்கைகள் அப்படியே ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. இத்த னைக்கும் இந்த ஆய்வு மற்றும் அறிக்கைகள் மீது அகழ்வா ராய்ச்சியாளர்கள் மற்றும் வர லாற்றாய்வாளர்கள் ஆகியோர் ஏராளமான மறுப்புகளைத் தெரி வித்துள்ளனர். நிபுணத்துவம் தேவைப்படும் இந்த விஷயத் தில், அதிலும் பல நிபுணர்கள் கேள்விக் குறியாக்கிய ஆய்வ றிக்கையை, ஒருதரப்புக் கருத்தை அதுவும் அப்படியே ஏற்றுக் கொள்வது தீர்ப் பின் மீது நம்பகத்தன்மையை ஏற் படுத்த உதவவில்லை.

தான் ஒரு வரலாற் றாய்வாளர் இல்லை என்பதால் வரலாற்று ரீதியான அம்சத்தை அலசிப் பார்க்கவில்லை என்று ஒரு நீதிபதி கூறியுள்ளார். ஆனால் இந்த வழக்கில் தீர்ப்பு சொல்ல வரலாறு மற்றும் தொல் பொருள் ஆய்வு ஆகிய இரண் டும் அவசியம் (!) என்று தெரி வித்துள்ளார். இவர் இப்படிச் சொன்னாலும் வரலாற்று ரீதி யான கோரிக்கைகள் மற்றும் கடந்த ஆயிரம் ஆண் டுகளாக இருக்கும் வரலாற்றுக் கட்டிடங் கள்தான் சர்ச்சைக்குரியதாக உள்ளது.

500 ஆண்டுகளுக்கு முன் பாகக் கட்டப்பட்ட மசூதி, இத்த னைக்கும் நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியத்தின் ஒரு அங் கமாக இருந்த மசூதி, ஒரு அர சியல் தலைமையின் தூண்டுத லின்பேரில் தகர்த்தெறியப்பட் டது. இந்த ஒழுக்கங்கெட்ட அழிவுச்செயல் மற்றும் நமது பாரம்பரியத்திற்கு எதிரான குற்றம் கண்டிக்கப்பட வேண்டி யது என்று தீர்ப்பில் குறிப்பிடப் படவில்லை. கட்டப்படவிருக்கும் புதிய கோவிலின் கருவறை மசூதி இருந்த இடத்தில் இருக் கும். இருந்ததாகக் கருதப்படும் கோவில் தகர்க்கப்பட்டது கண் டனத்துக்குள்ளாகியுள்ளது. இது தான் புதிய கோவிலை நியா யப்படுத்துகிறது. ஆனால் மசூதி யைத் தகர்த்ததற்கு கண்டனம் எழவில்லை. வழக்கிற்குள் இந்த அம்சம் வராமல் வசதியாகத் தவிர்க்கப்பட்டுள்ளது.

தவறான முன்னுதாரணம்

ஒரு சமூகம் என்று கூறிக் கொண்டு, தங்கள் நம்பிக்கை யின் அடிப்படையில் இதுதான் கடவுள் பிறந்த இடம் என்று அறி விப்பு செய்யக்கூடிய முன்னுதார ணத்தை இந்தத் தீர்ப்பு ஏற்படுத் தியுள்ளது. இனி ஏராளமான அவதரித்த இடங்கள் என்ற பிரச்சனைகள் உருவாகலாம். வேண்டுமென்றே வரலாற்று ரீதி யான சின்னங்களை அழித்தது கண்டிக்கப்படவில்லை என் றால், மற்ற சின்னங்களை அழிப் பதை எப்படித் தடுக்க முடியும்? வழிபாட்டுத்தலங்களின் அந் தஸ்தை மாற்றுவதற்கு எதிரான 1993 ஆம் ஆண்டு மசோதா பலனளிக்கவில்லை என்பதை நாம் கடந்த சில ஆண்டுக ளாகவே பார்த்து வருகிறோம்.

வரலாற்றில் எது நடந்ததோ, அது நடந்துவிட்டது. அதை மாற்ற முடியாது. ஆனால் அதன் முழுமையான தன்மையி லிருந்து அதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். நம்பத் தகுந்த ஆதாரத்தை அடிப்ப டையாகக் கொண்டு நிகழ்வுக ளைப் பார்க்க முனையலாம். தற் போதைய அரசியலுக்காக கடந்த காலத்தை மாற்றி அமைத்துவிட முடியாது. வர லாற்றுக்குள்ள மரியாதையை இந்தத் தீர்ப்பு செல்லாக் காசாக்கி விட்டது. வரலாற்றின் இடத்தில் மத நம்பிக்கையை அமர்த்திவிட்டது. வெறும் நம் பிக்கையை அடிப்படையாகக் கொண்டதாக இல்லாமல், ஆதா ரங்களை அடிப்படையாகக் கொண்டே நாட்டின் சட்டம் இயங்கும் என்று நம்பும் போது தான் உண்மையான சமா தானம் வரும்.

(கட்டுரையாளர்:

பண்டைக்கால இந்தியா குறித்த பிரபல வரலாற்றாய் வாளர்)

தமிழில் : ஹரி